லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது அந்த வங்கியில் பணம் வைத்துள்ளவர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு கட்டத்தில் அபார வளர்ச்சி பெற்று லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி கடந்த நான்காண்டுகளாக சரிவை சந்தித்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தொடர்ந்து நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் வங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. ஆனாலும் அதில் போதிய பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. 

எனவே  வங்கியிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்து மாதத்திற்கு 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என ஆர்பிஐ அறிவித்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். திடீரென வந்த இந்த அறிவிப்பால் வங்கியில் டெபாசிட் செய்துள்ள தங்களது பணம் மீண்டும் கைக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டி.என் மனோகரனை நிர்வாக அதிகாரியாக நியமித்து உள்ளது ஆர்பிஐ. 

மேலும் டெபாசிட் செய்துள்ளவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது, வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் பணம் குறித்து அச்சப்பட வேண்டாம், வங்கி கணக்கில் பணம் பாதுகாப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது, 2020 ஆம் ஆண்டில் இந்த வங்கி மிகப்பெரும் இழப்பை சந்தித்துள்ள நிலையில் புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டி.என் மனோரன் ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என கூறியுள்ளார்.