Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..!! முதலமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

நாடு மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மின்சார திருத்த மசோதா(2020) முன்மொழியப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

chatisgar cm poobesh pagal criticized central government
Author
Delhi, First Published Jun 10, 2020, 5:32 PM IST

நாடு மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், மின்சார திருத்த மசோதா 2020 முன்மொழிந்திருப்பது ஏன் என சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- பெரும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில் மக்கள் செலவு செய்யும் தகுதி அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, உற்பத்தி செலவை வைத்து கட்டண நிர்ணயம் செய்வது பலன் தராது என்று குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு புவியியல் வளங்களைக் கொண்டுள்ளன. 

chatisgar cm poobesh pagal criticized central government

தேசத்தின் நலனுக்காகவே வளங்களை மிகவும் திறமையாகவும் பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன, அவ்வாறிருக்கையில் ஒரே அளவுகோல் அனைவருக்கும் பொருந்தாது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரே  கொள்கையை  மற்றும் ஒரு குறித்த  சதவிகிதத்தை கட்டணமாக அறிவிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. முன்மொழியப்பட்ட மின்சார திருத்த  மசோதாவானது புதுப்பிக்கத்தக்க மற்றும் நீர் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கி பரிந்துரைக்கிறது. ஆனால் இதனை மாநில ஆணையங்களுக்கு வழங்க வேண்டும். 

chatisgar cm poobesh pagal criticized central government

நாடு மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மின்சார திருத்த மசோதா(2020) முன்மொழியப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. நாடு முன்னெப்போதும் சந்திக்காத ஒரு பிரச்சனையில் அரசின் அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மக்களின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காகவே இந்த நேரத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பதாக நிபுணர்களும் ஊழியர் சங்கங்களும் குற்றஞ்சாட்டுகின்றனர் எனவே நாடு சுமூக நிலைக்கு திரும்பியபின் அனைத்து மாநிலங்களும் கலந்தாலோசித்து புதிய வரைவு மசோதாவை கொண்டு வர வேண்டும் அதுவரை இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது இவ்வாறு சத்தீஸ்கர் முதல்வர் பூபிஎஸ் பார்க்கில் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios