சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டபோதே அமைச்சர் விஜயபாஸ்காரை மாற்றம் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் முழங்கின.

ஆகையால் அமைச்சரவையில மாற்றம் வரும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போதைக்கு மாற்றம் இல்லை என்கிற முடிவை எடுத்து இருக்கிறார்ன் எடப்பாடி பழ்னிசாமி. கொரோனா பற்றி சட்டசபையில், மார்ச் மாதம் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை செய்தபோது 'தமிழகத்தில் ஒரு உயிர் கூட பலியாக விட மாட்டோம்' என முதல்வர் எடப்பாடி சபதம் போட்டார்.

அதே போல், ஆரம்பத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை, பலரும் பாராட்டினார்கள். ஆனால் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை, முறையாக சோதனை செய்யாதது, டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவர்களை கோட்டை விட்டது, கோயம்பேடு மார்க்கெட்டை மூடாமல் இருந்தது என பல விஷயங்களில், அரசு சொதப்பி, கொரோனாவை பரவ விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு, சுகாதாரத் துறையின் செயல்பாடு சரியில்லாததும் காரணம் என புகார்கள் கிளம்பின. இதனால், துறையின் செயலாளர், அமைச்சரை மாற்ற, முதல்வர் முடிவு எடுத்திருந்ததாக கூறப்பட்டது. செயலாளர் பீலா ராஜேஷை மாற்றையாயிற்று. மத்தபடி வேற எந்த மாற்றமும் இருக்காது என தலைமைச் செயலக வட்டாரம் கூறுகிறது.