மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் டாக்டர் ராமதாஸ் சிஷ்யர் !! அதிர்ச்சியில் எதிர்கட்சிகள் !!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் சிஷ்யரான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித்  தலைவர் சந்திர சேகர ராவ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார். அறுதிப் பெரும்பான்மையுடன் அவர் அங்கு ஆட்சி அமைக்க உள்ளார்.

chandra sekara rao won telengana

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து  தெலங்கானா உருவாக்க வேண்டும் என்று மிகக் கடுமையாக போராடியவர் சந்திர சேகர ராவ். அவரது தொடர் போராட்டங்கள் காரணமாக தெலங்கான உருவாக்கப்பட்டது. அந்த மாநிலம் பிரிக்கப்பட்டவுடன் நடைபெற்ற முதல்  தேர்தலில் டிஆர்எஸ் கட்சி போடியிட்டு வெற்றி பெற்று சந்திர சேகர ராவ் முதலமைச்சரானர்.

chandra sekara rao won telengana

சந்திர சேகர ராவைப் பொறுத்தவரை தெலங்கான போராட்டத்துக்கு பெரும் தூண்டுகோலாக இருந்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான். டாக்டரின் போராட்டங்கள் தெலங்கானாவில் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றது என்றே சொல்லலாம்.

சந்திர சேகர ராவ் கட்சியின் அலுவலகம் ஹைதிராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பிரமாண்டமாக கட்டப்பட்டபோது, அதனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திறந்து வைத்தார். அப்போது பேசிய சந்திர சேகர ராவ் ராமதாசை தன்னுடைய குரு என சொல்லி மகிழ்ந்தார்.

chandra sekara rao won telengana

இந்நிலையில்  119 தொகுதிகளைக் கொண்ட  தெலங்கானாவில், கடந்த 7ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 67 சதவீத  வாக்குகள் பதிவாகின. தேர்தல் களத்தில் 1,821 வேட்பாளர்கள் உள்ளனர்.

ஆளும் தெலங்கானா  ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக ஆகிய கட்சிகள் தனித்தும், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் - தெலங்கானா  ஜன சமிதி - இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியாகவும் தேர்தல் களத்தில் இருந்தன.

chandra sekara rao won telengana

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி 85  இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

 

இதையடுத்து அங்கு ராமதாசின் சிஷ்யர் சந்திர சேகர ராவ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios