Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு எதிராக அணி திரளும் எதிர்கட்சிகள்…. ஸ்டாலினைச் சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு !!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். இதையடுத்து நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார்.


 

chandra babu naidu will meet stalin tommorrow
Author
Chennai, First Published Nov 8, 2018, 9:31 AM IST

பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு, பாஜகவையும், மோடியையும் சரமாரியாக தாக்கி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முனைப்பில் தற்போது செயலாற்றி வருகிறார்.

chandra babu naidu will meet stalin tommorrow

அதன் ஒருபகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதேபோல், பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அப்போது கூறியிருந்தார்

chandra babu naidu will meet stalin tommorrow

அதன்படி, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலினை நாளை சந்திரபாபு நாயுடு சந்திக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் பாஜவின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இந்த சந்திப்பு இருக்கும் எனவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios