கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆந்தி மாநில சட்டமன்றத் தேர்லில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி  வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசியல் வன்முறை மற்றும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள தெலுங்கு தேசம் இன்று பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தது.


  
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான  சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா  லோகேஷ் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு இல்லத்திற்கு செல்ல முயன்ற அவரது கட்சியினரையும் தடுத்து நிறுத்திய போலீசார், தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். நரசரவ்பேட்டா, சட்டினோப்பள்ளி, பல்னாடு, குர்ஜாலா ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

புதிதாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி பேரணியைத் தடுக்க அடக்குமுறையை கையாள்வதாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.