திமுக கவுன்சிலரால் அடித்துக்கொல்லப்பட்ட ராணுவ வீரர்... மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம்!!
திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் சேர்ந்த பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு ஆகியோர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர். அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் நாகரசம்பட்டி பேரூராட்சி 1 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இந்த நிலையில் சின்னசாமிக்கும் பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ரூ.1 கோடி பேரம்... கே.பி.முனுசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஆதரத்தோடு குற்றச்சாட்டு!
இதனால் சின்னாசாமி தனது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் மேலும் சிலருடன் பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு மற்றும் அவர்களது தந்தை மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழந்த பிரபுவின் மனைவி, புனிதா தனது இரண்டு பெண் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு திமுக கவுன்சிலரால் அடித்துக்கொள்ளப்பட்ட தனது கணவனுக்காக நீதி கேட்டு வருகிறார். ஆனால் இந்த சம்பவம் பற்றி ஆளும் கட்சியை சேர்ந்த யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இதையும் படிங்க: நீங்க கால்ல விழுந்த சசிகலாவும், ஜெயலலிதாவும் மீசை வச்சிருந்தாங்களா? ஈபிஎஸ் கருத்துக்கு கனிமொழி பதிலடி!!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை வந்து சந்திக்க வேண்டும் என்று கண்ணீல் மல்க வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ராணுவ வீரர் கொல்லப்பட்டது எதிரியால் அல்ல, திமுக குண்டர்களால். இதை மறந்துவிடாதீர்கள். இதை நாடும் மக்களும் நினைவில் கொள்ளும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.