அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. - பி.ஜே.பி கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டது. இதில் தமாக தோற்றுவிட்டாலும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாகவே உள்ளார்.

மேலும் ஜி.கே.வாசனை தங்கள் கட்சிக்குள் கொண்டு வரவும் பாஜக தலைவர்கள் வலை விரித்து வருகின்றனர். அவரும் இது வரை மாட்டாமலேயே இருந்து வருகிறார். அண்மையில் மகாபலிபுரம் வந்த மோடியை  சந்தித்த வாசன் அவருடன் நெருககமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது வாசனை தன்னை சந்திக்க வரும்படி மோடி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று தமாக தலைவர் வாசன் டெல்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவர் இன்று காலை பிரதமரை சந்தித்துப் பேசினார். மேலும் அவர்   அமித் ஷாவையும் சந்திக்க உள்ளார். இந்த பேச்சு வார்த்தையின்போது வாசன் தனது தமாகவை பாஜகவுடன் இணைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக . இன்னும் ஒரு மாதத்துக்குள் மாற்றியமைக்கப்படவுள்ள மத்திய அமைச்சரவையில், நிதிஷ்குமாரின் மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜி.கே.வாசன் உள்ளிட்டோருக்கு இடம் கொடுப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது..

மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைத்தவுடன், தமிழக பாஜகவுக்கு வாசன் தலைவராகவும் நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.