Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் முழு விவரம்...!! எந்தெந்த மாநிலம் ஆபத்தில் உள்ளது தெரியுமா..!!

தனுடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கொரோனா  நோயில்  இருந்து குணம் அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

central health deportment release report regarding corona virus affected list in Indian state vice
Author
Delhi, First Published Mar 13, 2020, 2:15 PM IST

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது . கொரோனா  வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் இதுகுறித்த  தகவல் வெளியிடப்பட்டுள்ளது .  அதில் 75 பேருக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும் ,  அதில் ஒருவர் பலியான நிலையில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா  வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது .  இதுவரை உலக அளவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

central health deportment release report regarding corona virus affected list in Indian state vice

இந்நிலையில்  இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத் தொடங்கியுள்ளது .  இதுவரை சுமார் 75 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் பாதிக்கப்பட்டவர்கள் 58 பேர் இந்தியர்கள் 17 பேர் வெளிநாட்டினர்  ஆவர் ,  அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா  வைரஸ் ஏற்பட்டுள்ளது மகாராஷ்டிராவில் 11 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 10 பேருக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  டெல்லியில் 6 பேருக்கும் கர்நாடகாவில் 5 பேருக்கும் கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  மேலும் லடாக் ,  ராஜஸ்தான் ,  தெலுங்கானா ,  தமிழ்நாடு ,  ஜம்மு-காஷ்மீர் ,  ஆந்திரா ,  பஞ்சாப் ,  உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கும். கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது .  ஹரியானாவில் 14 பேருக்கும் ராஜஸ்தானில் இரண்டு பேருக்கும் என மொத்தம் 17 வெளிநாட்டவர்களுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது .  இதனுடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கொரோனா  நோயில்  இருந்து குணம் அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது . 

central health deportment release report regarding corona virus affected list in Indian state vice

துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் திரும்பிய 76 வயது முதியவர் ஒருவர் கொரோனா  வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் , கொரோனா வைரசால் உயிரிழந்த முதல் பலி என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது .  இந்நிலையில் பெங்களூருவில் இருக்கும் கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .  சீனாவில் இந்த வைரஸ் வேகமாக குறைந்து வந்தாலும் ஈரான் ,  இத்தாலி ,  போன்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது .  இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios