தமிழக  அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு நடத்தி வருகிறது.

கொரோனாவால் உலகம் முழுவதும் 25 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த வாரம் சில நாள்கள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

 சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மத்திய சுகாதாரக் குழு ஆய்வு செய்து வருகிறது. தமிழக  அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரக் குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதேபோல், சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் மத்திய சுகாதர குழு ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது மருத்துவமனைகளில் உள்ள வசதிகள், சிகிச்சையளிக்கும் முறை, மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.