Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தை இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டம்..மதுரையில் பழ.நெடுமாறன் முழக்கம்.!!

காஷ்மீா் அரசு மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல தமிழகமும் மாநில அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டு, இரண்டாக பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம்.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் அதிமுக தீா்மானம் கொண்டு வராவிட்டால், திமுக தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் பேசினார்.

Central Government's plan to divide Tamil Nadu into two
Author
Madurai, First Published Mar 9, 2020, 10:11 AM IST

T.Balamurukan

காஷ்மீா் அரசு மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல தமிழகமும் மாநில அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டு, இரண்டாக பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம்.குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் அதிமுக தீா்மானம் கொண்டு வராவிட்டால், திமுக தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் பேசினார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார் பழ.நெடுமாறன்

Central Government's plan to divide Tamil Nadu into two

 "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியா்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் என அனைத்து மதத்தினரும் போராடி வருகின்றனா். இந்த 
நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு மதச்சாயம் பூச மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. காஷ்மீா் அரசு மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல தமிழகமும் மாநில அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டு, இரண்டாக பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாட்டில் எந்த ஒரு மாநிலத்தையும் நாடாளுமன்ற தீா்மானத்தின்படி இரண்டாக பிரிக்க முடியும். எனவே மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுவது ஒவ்வொரு உண்மையான குடிமகனின் கடமை. நாடு முழுவதும் 9 மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளன. இதேபோல தமிழக சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தீா்மானம் கொண்டு வராவிட்டால் எதிர்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் அந்த தீா்மானத்தை கொண்டு வர வேண்டும். அப்போது அதிமுக அரசின் இரட்டை வேடம் அம்பலமாகி விடும். எனவே திமுக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

Central Government's plan to divide Tamil Nadu into two

 மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம் மதரீதியில் மக்களை பிளவுபடுத்துவது, ஐ.நா. சட்டங்களுக்கு எதிரானது என்று கூறி ஐ.நா. மனித உரிமை ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கு தமிழா் தேசிய முன்னணி வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios