கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது . அதேபோல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வருபவர்களும்  கட்டாய பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவியுள்ளது . துவரையில் கொரோனா வைரஸுக்கு சுமார் 2345 பேர் உயிரிழந்துள்ளனர் .  சுமார் 75 ஆயிரத்து 567 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

  

வைரஸ் பாதிப்பால் நாளுக்குநாள் மக்கள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது ,  இதுவரை இந்த வைரஸை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  சீனாவையும் தாண்டி ஜப்பான் சிங்கப்பூர் ஹாங்காங் தாய்லாந்து அமெரிக்கா ஆஸ்திரேலியா என இருபதுக்கும் அதிகமான நாடுகளில்  இந்த வைரஸ் பரவி உள்ளது . இதற்கு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா , சீனா ,  ஜப்பான் ,  ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் போராடி வருகின்றன.  சீனாவுக்கு அடுத்ததாக ஜப்பானில் அதிகமானோர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில்  ஈரானிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  ஈரானில்  இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் .

 

அதேபோல் சிங்கப்பூரிலும் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது .  கடந்த 3 மாதமாக சீனாவில் வீரியமாக ,  இருந்த கொரோனா வைரஸ் தற்போது வீரியம் குறைந்துள்ளதாக கூறப்படும் நிலையில் ,  அது சிங்கப்பூரிலும் வேகமாக பரவி வருகிறது .  ஆகவே இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது .  நேபாளம் ,  இந்தோனேசியா ,  மலேசியா ,  வியட்நாமில் ,  இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும் என்றும்,   காய்ச்சல் ,  இருமல் ,  மூச்சுத்திணறல் அறிகுறிகள்  இருந்தால் உடனே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .