இளையாங்குடி பகுதியில் மத்திய அரசின் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்  கணக்கெடுக்க வந்த ஊழியர்கள் ஒட்டம் பிடித்தனர்.  சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் மத்திய அரசின் கணக்கெடுப்பு பணிக்காக ஊழியர்கள் வருவதாகவும் அதற்காக ஒத்துழைப்பு நல்குமாறு பேரூராட்சி சார்பில் கடந்த இரு தினங்களாக ஆட்டோ மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியானது. 

இதனையடுத்து இளையான்குடி புதூர் பகுதியில் காரில் வந்த வட நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் பொதுமக்களிடம் விவரங்களைக் கேட்க முற்பட்டனர். இந்தியில் பேசிய அந்த நபர்களின் பேச்சில் நம்பிக்கை இல்லாமல் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இது குறித்து சரியான விளக்கம் அளிக்காத ஊழியர்களுக்கு  பொது மக்களின் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கிருந்து கணக்கெட்டுக்க வந்ததாக கூறிய நபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் இளையான்குடி பகுதியில் இந்திய அரசின் குடிமைப்பணிகாக கணக்கெடுக்க வடநாட்டைச் சேர்ந்தவர்கள் வளம்வருவதாக  சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

வந்தவர்கள் உண்மையிலேயே அதிகாரிகள்தானா..? இவர்கள் அதிகாரிகள் என்று எப்படி நம்புவது,  இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பேரூராட்சி அலுவலக நிர்வாக அலுவலர் ஜெயராஜிடம், செய்தியாளர்கள் விளக்கும் கேட்டதற்கு ,  இது மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு பணிக்காக ஊழியர்கள் வந்ததாகவும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திரும்பி சென்றதாகவும் தெரிவித்தார்.