பலகோடி ரூபாய் மதிப்பில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது இக்கட்டிடம் சுமார் 1,350 பேர் தாராளமாக அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.   தற்போது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் 1927 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது ,  எட்வின்  லூடெய்ன்ஸ்,  ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இரண்டு இங்கிலாந்து  பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டன இக் கட்டடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் கடந்துவிட்டது .  நாட்டின் எம்பிக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் நாடாளுமன்றத்தை விரிவாகவும் புதிதாகவும் அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்று  விடுத்திருந்தார்,  அதில்   மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்பதுதான் அது,   இவை அனைத்தையும் கருத்தில் கொண்டுள்ள  மத்திய அரசு நாடாளுமன்ற கட்டடத்துக்கு மாற்றாக  புதிய ஒரு கட்டிடத்தை அமைக்க முடிவு செய்துள்ளது .  அதன்படி 2024 ஆம் ஆண்டிற்குள் ஒரு புதிய கட்டிடத்தை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது . தற்போது புதிதாக அமைய உள்ள கட்டிடத்திற்கான வரைபடமும்  வெளியாகியுள்ளது .  இக்கட்டிடம்  முக்கோண வடிவத்திலும் அதன் மேற்பரப்பில் கூம்பு வடிவமும்  அதற்கு அருகில் மூவர்ணத்துடன் கூடிய தூண் வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளன அதாவது தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகிலேயே 13 ஏக்கர் பரப்பளவில் என்று புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைய உள்ளது என்பது கூடதல் தகவல்,  

அதே நேரத்தில் இதில் சுமார் 1,350 எம்பிக்கள் வரை தாராளமாக அமரலாம் என்றும் மக்களவையில் மட்டும் 900 ஆண்டுகள் வரை தாராளமாக அமர முடியும் என்றும் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது .  இது குறித்து கூறிய  கட்டிடத்தின் வடிவமைப்பாளர் பிமல் படேல் ,  புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்கள் தாராளமாக அமரும் வகையில் இருக்கைகள் அமைக்க உள்ளோம் ,  பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் எம்பிக்கள் இருக்கைகள் குறுகளாக உள்ளன இடம் இல்லாத காரணத்தினால் தூண்களுக்கு பின்னால் கூட அவர்கள் அமரும் நிலை உள்ளது .  புதிய நாடாளுமன்ற கட்டிடம் வந்தபின்னர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .