காஷ்மீர் மாநிலத்தில் சுமார்  50 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில ஆளுனர் சத்யபால் மாலிக் அதிரடியாக அறிவித்துள்ளார், காஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சொல்வதற்கான முதல் படியே இந்த அறிவிப்பு என கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கிவந்த சட்டப்பிரிவு  370 ஐ மத்திய அரசு நீக்கியது, அம்மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டாக பிரித்து தனித்தனியே இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு அறிவிக்கை செய்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்கட்சிகள் கடுமையாக  விமர்சிப்பதுடன், எதிர்த்துப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சுயாட்சி அதிகாரம் கொண்ட காஷ்மீர் மாநிலத்தை,  அம்மாநில மக்களின் அனுமதியின்றி இந்தியா இணைத்துக்கொண்டது தவறு என்றும்,  மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம் மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் எதிர்த்து வருகின்றனர்,  மத்திய அரசின் இந்த நடவடிக்கை அம்மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலையைதான் உருவாக்குமே தவிற அமைதியை ஏற்படுத்தாது என்றும் எதிர்கட்சிகள் எச்சரித்து வருகின்றனர், மத்திய அரசின் எதேச்சதிகார போக்கினால் காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. எனவே சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது செல்லாது என உடனே அறிவிக்க வேண்டும் எனவும்  எதிர்கட்சிகள் தொடர்ந்து போர்கொடி உயர்த்தி வருகின்றனர். 

எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அப்போது பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் , காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது இந்திய மக்களின் நீண்டநாள் கனவு என்று கூறியிருந்தனர். தற்போது அந்த கனவு நிறைவேறி உள்ளது என்றும் அவர்கள் பெருமிதம் அடைந்திருந்தனர். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதின் மூலம் தீவிரவாத ஊடுறுவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் , இனி தீவிரவார ஊடுறுவல்கள், மற்றும் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்கள் நீங்கி  காஷ்மீர் மக்கள் வளர்ச்சி பாதையில் மகிழ்ச்சியாக நடைபோட உள்ளனர் என்றும் அப்போது அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர் , இன்னும் 70 நாட்களுக்குள் காஷ்மீர் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்ற மாநில மக்களைவிட சிறப்பானதாக அமையும்  என்று அவர்கள் கூறியிருந்தனர்.  இந்நிலையில் எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்கு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு முதற்கட்டமாக உடனடி அரசு வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பை காஷ்மீர் மாநில  ஆளுனர் சத்ய பால் மாலிக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு பல்வேறு வகையில் தொல்லை கொடுத்து வரும் பாகிஸ்தான், எப்படியாவது காஷ்மீர் இளைஞர்களிடத்தில் கருத்து வேறுபாட்டை உருவாக்கி  இந்தியாவிற்கு எதிராக திசை திருப்பலாம் என்று  பல திவிரவாத குழுக்களின் மூலம் முயற்ச்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், காஷ்மீர் இளைஞர்களுக்கு  உடனடி அரசு வேலை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்து பாகிஸ்தான் உள்ளிட்ட பிரிவினைவாத சக்திகளின் திட்டத்தை சுக்கு நூறாக உடைத்திருக்கிறது மத்திய அரசு.  தற்போது வெளியாகி உள்ள இந்த அறிவிப்பு  வெறும் துவக்கம் தான் இன்னும் போகப்போக பல நல்ல  திட்டங்கள் காஷ்மீர் மக்களுக்காக காத்திருக்கிறது  எனறும் தகவல் வெளியாகி வருகிறது

மத்திய அரசின் இந்த அறிவிப்பு காஷ்மீரை சகஜ நிலைக்கு கொண்டுவரவும்,  திசை திருப்பப்பட்டுள்ள இளைஞர்களை செம்மைபடுத்தி அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வெளிச்சமாக இது இருக்கும் என்று, அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசை காஷ்மீர் மக்கள்  மனமுவர்ந்து பாராட்டி வருவதுடன், இது போன்ற அறிவிப்புகள் தொடர வேண்டும் என்றும்  அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.