கொடநாடு கொலை வழக்கு ...! குற்றவாளி யார்..? சிபிசிஐடி விசாரணை தொடங்கியது
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுருந்தார் இந்தநிலையில் தற்பொழுது விசாரணை தொடங்கியுள்ளது
கொடநாடு பங்களாவில் கொலை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சயான், வாளையாா் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கைது செய்தனா்.
கொடநாடு வழக்குகள் தொடர்பாக சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் தனிப்படை காவல் துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது. இச்சம்பவத்துக்குப் பின்னா் இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
நத்தம் விஸ்வநாதனை வைத்தியலிங்கம் அடிக்க பாய்ந்தாரா..! நடந்தது என்ன..? ஜேசிடி பிரபாகர் விளக்கம்
சிபிசிஐடி போலீசார் விசாரணை
அதன்படி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம். தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . சிபிசி ஐடி டி எஸ் பி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று விசாரணையை துவக்கியுள்ளனர்.
தனிப்படை விசாரித்த வந்த வழக்கு அண்மையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது தற்பொழுது சிபிசிஐடி விசாரணையை துவக்கியுள்ளது. கொலை வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் விரைவில் நடைபெறக்கூடிய விசாரணைகளில் சிபிசிஐடி பல உண்மைகளை வெளிக்கொண்ட வர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட விசாரணையின் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்