cauvery issue draft will be submited 14th may SC

காவிரி விவகாரத்தில் 14 ஆம் தேதி வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ….

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாகவும், மத்திய அமைச்சரைவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் மீண்டும் பழைய பல்லவியைப் பாடியுள்ளார். அதே நேரத்தில் வரும் 14 ஆம் தேதி இது தொடர்பாக வரைவு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியிலிருந்துதமிழகத்திற்குமேமாதத்திற்குள் 4 டிஎம்சிதண்ணீர்திறந்துவிடமுடியாதுஎனஉச்சநீதிமன்றத்தில்கர்நாடகஅரசுஅறிக்கைதாக்கல்செய்துள்ளநிலையில்இதுதொடர்பானவழக்குஉச்சநீதிமன்றத்தில்இன்றுமீண்டும்விசாரணைக்குவந்தது..

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற 6 வாரத்திற்குள் செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் அதனை நிறைவேற்றாத மத்திய அரசு மே 3ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் செயல்படுத்தவில்லை.

தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது மே மாதத்திற்குள் தமிழகத்திற்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழகத்திற்கு அவ்வாறு தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் இருப்பதாக கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம் மே மாதம் இறுதிவரை காத்திருக்காமல் தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், காவிரி விவகாரம் தொடர்பான வரைவு அறிக்கை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் அந்த அறிக்கையைத் தாக்கல் செய்வதில் அவசரம் காட்டமுடியாது என்றும் இரு மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து வரும் 14 ஆம் தேதி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.