Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு!

Case registered under Section 4 on MK Stalin
Case registered under Section 4 on MK Stalin
Author
First Published May 24, 2018, 11:57 AM IST


தூத்துக்குடி கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலினிட, வைகோ, திருநாவுக்கரசர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்த போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகளை பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்தனர். 

அப்போது போலீசாருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடவடிக்கையில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத நிலையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில், நேற்று தூத்துக்குடி  மருத்துவமனைக்குச் சென்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  143,188,153(ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், முத்தரசன், கமல் ஹாசன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களை சந்திப்பது அரசியல் கட்சி தலைவர்களின் கடமை என்றும், காயம் அடைந்தவர்களை அமைச்சர்கள் யாரும் சந்திக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். தமிழக அரசு போட்டுள்ள வழக்கை சந்திக்க தயார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios