முதலமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திருவாடனை சட்டமன்ற தொகுதி கருணாஸ் மீது சென்னை, நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருணாஸ் கட்சியினர் சென்னையில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஆர்பாட்டம் நடத்தினர். அப்போது பேசிய கருணாஸ், தனது கட்சி பிரமுகர்களை வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் டி.சி., அரவிந்தன் தொந்தரவு செய்வதாக கூறினார். 

வழக்கறிஞரான தனது கட்சிப் பிரமுகர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் வழக்கு 

பதிவு செய்யப்பட்டுள்ளதாக கருணாஸ் கூறினார். நான் ஒரு போன் போட்டு பணம் கொடுத்து அனுப்புங்கள் என்றால் பணம் கொடுத்து 

அனுப்பிவிடுவார்கள் அப்படி இருக்கையில் எனது கட்சிக்காரர் எதற்கு கத்தியை காட்டி பணம் பறிக்க வேண்டும்?

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் உரிமையாளர்களும் நாடார்களாகவும், பிராமினாகவும் இருப்பதாக நடிகர் கருணாஸ் 

பேசினார். வன்னியர்கள், கவுண்டர்களை வம்பிழுத்த கருணாஸ் நாடார் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாஸ் மீது நடவடிக்ககை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் 

முன்னணி புகார் கூறியுள்ளது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர், காவல்துறை அதிகாரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது 6 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.