முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பொன்முடி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளை, தனது உறவினர்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாகப் புகார் எழுந்தது. இதில், 30 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ததாக பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பாக, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது, விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை, அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி திருமதி. சுபா அன்புமணி உத்தரவிட்டார்.
