சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன்… 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வன்முறை  தூண்டும் விதமாக பேசியது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

case filed under two sections against stunt master kanalkannan for his controversial speech

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வன்முறை  தூண்டும் விதமாக பேசியது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாதகாலமாக இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா சென்னை அருகே நடைபெற்றது.

இதையும் படிங்க: கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடையுங்கள்... ஓவரா பேசிய கனல் கண்ணன்.

case filed under two sections against stunt master kanalkannan for his controversial speech

அதில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, இந்துவாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். வாலெடுத்து சண்டை போட்ட காலம் மாறி இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடு பிடிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு ஒரு சிலை இருக்கிறது. அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள்".. வெறுப்பு கக்கிய பாஜக நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.

case filed under two sections against stunt master kanalkannan for his controversial speech

அவரின் இந்த கருத்துக்கு திராவிட இயக்க ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கனல்கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று திராவிட இயக்க பற்றாளர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வன்முறை  தூண்டும் விதமாக பேசியது உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios