"பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள்".. வெறுப்பு கக்கிய பாஜக நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வீடியோ வெளியிடு வெறுப்பு பிரச்சாரம் செய்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜகவினர் பெரியார் குறித்து தொடர் வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜக நிர்வாகி இவ்வாறு வீடியோ வெளியீட்டு கைதாகியுள்ளார்.
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வீடியோ வெளியிடு வெறுப்பு பிரச்சாரம் செய்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜகவினர் பெரியார் குறித்து தொடர் வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜக நிர்வாகி இவ்வாறு வீடியோ வெளியீட்டு கைதாகியுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் அடையாளமாக உள்ள பெரியார், அண்ணா பொன்ற தலைவர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக, திராவிடம் மற்றும் அச்சித்தாந்தங்களுக்கு எத்ராக தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொரு மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த எச்.ராஜா, இந்து இயக்கங்கள் தந்தை பெரியாரை அவமரியாதை செய்யும் வகையில் பேசிவருகின்றனர்,
இந்நிலையில் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அரசு திராவிட மாடல் என்றும், இது திராவிட மண் என்றும் தொடர்ந்து பேசி வருகிறது. பெரியார் மண் சமூகநீதி மண் என்று திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகின்றன. இதனால் பாஜகவினரை மேலும் வெறுப்படைந்து வருகின்றனர். இதற்கிடையில் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகிறது, அவரின் சிலைகள் சேதப் படுத்தப் படுவது, பெரியார் சிலை மீது காவி ஊற்றுவது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது.
இந்த வரிசையில் பாஜகவை சேர்ந்த தென்காசி மாவட்ட விளையாட்டு மற்றும் மேம்பாட்டு திறன் பிரிவு தலைவர் கிருஷ்ணன் (33) என்பவர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, அதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை தூண்டும் வகையில் அவதூறு கருத்துக்கள் இடம் பெற்றிருந்தது, அந்த வீடியோவில் தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள், பெரியார் சிலைக்கு சாணி அபிஷேகம் செய்யுங்கள், அவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவியுங்கள் என்பது போன்ற வெறுப்புப் பிரச்சாரம் இடம்பெற்றிருந்தது.
இது சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் பல பாஜகவினர் இதை தங்களது பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இதுதொடர்பாக புளியங் குடியை சேர்ந்த திமுகவினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் அதில் வெறுப்பு வீடியோ வெளியிட்ட நபர் பால கிருஷ்ணன் என்பது தெரிந்தது பாஜகவை சேர்ந்த அந்த நபரை கைது செய்ததுடன் அந்நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 315/22 153(A) 505(1) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.