கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடையுங்கள்... ஓவரா பேசிய கனல் கண்ணன்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது, அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சிநாள் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது, அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சிநாள் என ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள அவரை கைது செய்ய வேண்டும் என்று திராவிட இயக்க பற்றாளர்கள் கொந்தளித்து வருகின்றனர். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களுக்கு எதிரான பிரச்சாரம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக திராவிட மண், பெரியார் மண் போன்ற கருத்துக்களை பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி என மேடைதோறும் முழங்கி வருகிறார். இதுஒருபுறம் பாஜகவினர் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்தான் திராவிடம் அதன் அடிநாதமான பெரியாருக்கு எதிரான கருத்துக்களை பாஜகவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகத்தான் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும், அவரது சிலையை இழிவுபடுத்த வேண்டாம் என்பது போன்ற பேச்சுக்கள் எழுந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: "பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள்".. வெறுப்பு கக்கிய பாஜக நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.
இந்த வரிசையில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் என்பவர் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசியுள்ளார். விவரம் பின்வருமாறு:- தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாதகாலமாக இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா சென்னை அருகே நடந்தது, அதில் கனல்கண்ணன் என்பவர் கலந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்: திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்திய சபரீசன்... நாங்கள் ஆண்டவனுக்கு, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல.. RS.பாரதி.
அப்போது மேடையில் பேசிய அவர் இந்துவாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன், வாலெடுத்து சண்டை போட்ட காலம் மாறி இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடு பிடிக்கிறார்கள், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு ஒரு சிலை இருக்கிறது. அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது, அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
அங்கிருந்தவர்கள் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது அவர் பேசிய தகவல் வைரலாகி வருகிறது. கடையில் பலரும் அவரை கண்டித்து கருத்து கூறி வருகின்றனர், திராவிட இயக்க ஆர்வலர்கள், பற்றாளர்கள் கனல் கண்ணனை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.