தமிழக அரசையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சனம் செய்த சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் அவர் கட்சியின் பொதுக் கூட்டங்களில் தமிழக அரசை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்.
இதே போல் செய்தியாளர்களிடம் பேசும்போதும் தமிழக அரசை விமர்சித்து வருகிறார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களையும் அவர் விட்டு வைப்பதில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசையும் முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்களை விமர்சித்துப் பேசியிருந்தார்.

அதற்காக அவர் மீது தற்போது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
