case against central government in supreme court Minister valarmathi said

பெரம்பலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக அமைப்பு செயலரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி.

பெரம்பலூர் மாவட்டம், மேற்கு வானொலி திடலில் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக் கூட்டம், மாவட்டச் செயலர் எம். வீரபாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கூட்டதில் அதிமுக அமைப்பு செயலரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான வளர்மதி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது:

"ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதற்காக மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். 

இந்தக் கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி எம்.பி மா. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் ராணி, எம்.என். ராஜாராம், ராஜேஸ்வரி, ஒன்றிய செயலர்கள் என.கே. கர்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர். 

முன்னதாக இந்தக் கூட்டத்தில் நகர செயலர் ஆர். ராஜபூபதி வரவேற்றார். கூட்டத்தின் இறுதியில் பொறுப்பாளர் கண்ணதாசன் நன்றித் தெரிவித்தார்.