cap symbol not alloted to dinakaran said election commission

டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை

ஆர்.கே நகர் இடைதேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பனி மும்முரமாக நடைபெற்று வருகிறது.மொத்தம் 72 போட்டியாளர்களில்,14 பேரின் வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டது

இந்நிலையில் தொப்பி சின்னத்தை கேட்டு விண்ணப்பித்த தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகளும் தொப்பி சின்னைதை கேட்டுள்ளதால், அவர்களில் யாருக்காவது ஒருவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப் படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது 

ஆனால் கடந்த ஆர்.கே நகர் தேர்தலின் போது தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது

நமது கொங்கு முன்னேற்ற கழகம், தேசிய மக்கள் சக்தி கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக தொப்பி சின்னத்தையே பதிவு செய்து இருந்ததால்,பெருத்த எதிர்பார்ப்பில் இருந்த தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து உள்ளனர்