பதவிக்காக காலில் விழுவது அதிமுக நிர்வாகிகளுக்கு வழக்கம். இப்போது ஓட்டுக்காக பொதுமக்களின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
பதவிக்காக காலில் விழுவது அதிமுக நிர்வாகிகளுக்கு வழக்கம். இப்போது ஓட்டுக்காக பொதுமக்களின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்தியநாதனை பொதுமக்கள் காலில் விழுந்து வாக்குகேட்குமாறு அமைச்சர் பெஞ்சமின் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வைத்தியநாதன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
அவர் நேற்று சோராஞ்சேரி பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது அவருடன் ஊரகதொழில்துறை அமைச்சர் பெஞ்சமினும் உடன்சென்று வாக்குசேகரித்தார். அப்போது பொதுமக்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்குமாறு அமைச்சர் பெஞ்சமின் கூற அதன்படியே பொதுமக்கள் காலில் விழுந்து வாக்குசேகரித்தார் அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன்.
இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது தாடியோடு இருந்த அதிமுக நிர்வாகி ஒருவரை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஓட்டுக் கேட்க செல்லும்போது முகச்சவரம் செய்துகொண்டு செல்ல வேண்டும் என கோபமாக கூறினார். மேலும் அவருக்கு புது சட்டை, வேஷ்டி எடுத்து கொடுத்து ஓட்டு கேட்டு போக சொல்லுங்கள் என அமைச்சர் கூறினார்.
