Asianet News TamilAsianet News Tamil

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வு ரத்து.. மீண்டும் தேர்வு... அமைச்சர் பொன்முடி தகவல்..!

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Cancellation of examination conducted by Anna University... minister ponmudi
Author
Tamil Nadu, First Published May 10, 2021, 8:44 PM IST

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் பருவத் தேர்வு நடத்தப்படும் என முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

Cancellation of examination conducted by Anna University... minister ponmudi

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி;- பிப்ரவரி 2021ல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு ஆன்லையில் 3 மணி நேரம் நடைபெறும், தேர்வுக்கான கட்டணம் கிடையாது, பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிக மார்க் பெற விரும்பினால், மீண்டும் தேர்வு எழுதலாம். அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளார்களோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Cancellation of examination conducted by Anna University... minister ponmudi

ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் சுமார் 4.25 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 1.10 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios