Asianet News TamilAsianet News Tamil

அதிகாரம் வந்துட்டா எதுவேணா பேசலாமா.? பொறுத்து பொறுத்து பார்த்து திமுகவை எகிறி அடித்த எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு தாயுள்ளத்தோடு அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்திருக்கிறது. அதிமுக அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் நேரில் சந்தித்தபோது, முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க கோரிக்கை வைத்தேன்.

Can we talk about whether the power has come or not? Edappadi Palanichamy, who looked at Stalin with respect and scored.
Author
Chennai, First Published Nov 3, 2021, 9:44 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

அதிமுக எப்போதும் இலங்கை தமிழர் விவகாரத்தில் என்றுமே இரட்டை வேடம் போட்டது இல்லை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு அதிமுக ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் செய்யப்பட்டதில்லை என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூரில் அகதிகள் முகாம் அடிக்கல் நாட்டு விழாவில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியுள்ளார். திமுக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வரும் ஒவ்வொரு திட்டங்களையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் அகதி முகாம்களை சீரமைத்து தருவதற்காக முதலமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார். 

Can we talk about whether the power has come or not? Edappadi Palanichamy, who looked at Stalin with respect and scored.

இதையும் படியுங்கள்: அய்யோ அசிங்கம், ஆபாசம்... டெல்லிக்கு பறந்த காயத்திரி ரகுராம்.. ஒற்றை புகாரில் திமுகவினரை அலறவிட்ட சம்பவம்.

அந்த வகையில் வேலூர் மாவட்டம் மேல் மொன ஊரில் இலங்கை தமிழர்களுக்காக  142.16 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 510 வீடுகளைக் கட்டி தருவதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது, கடந்த 10 ஆண்டுகால அதிமுக அரசு இலங்கை தமிழர்க்காக இதுவரை எந்த நல திட்டங்களையும் செய்ததில்லை, இலங்கை தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக அரசு ஏற்கும், தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் ஒரு தாயின் மக்கள்,  நாம் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் ஆனால் கடல் தான் நம்மை பிடித்திருக்கிறது, திமுக அரசு என்றென்றும் இலங்கை தமிழர்களுக்கு துணை நிற்கும். இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல என பேசிய அவர் பின்னர், முகாமை சுற்றி பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள தமிழர்களை நலம் விசாரித்தார்.

அதிமுக ஆட்சியில் இலங்கை தமிழர்களுக்காக எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டதில்லை என முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பொய்யையே மூலதனமாக கொண்டு ஆட்சிக்கு வந்தது திமுக, நிறைவேற்றா முடியாத வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின்.  கையில் அதிகாரம் கிடைத்துவிட்டதால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. 1980ஆம் காலகட்டத்தில் தனி ஈழம் கேட்டு போராடி இலங்கை தமிழர்களும் சிங்கள இனவாத அரசுக்கு எதிரான போர் உச்சத்தில் இருந்தபோது, அதிமுகவும் எம்ஜிஆரும் பல வழிகளில் இலங்கை தமிழருக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை இந்த நாடும் உலகமும் அறியும். அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களின் வாரிசுகளில் நூற்றுக்கணக்கான உயர்கல்வி பெற்று பெரு வாழ்வு வாழ்கிறார்கள்.

Can we talk about whether the power has come or not? Edappadi Palanichamy, who looked at Stalin with respect and scored.

இதையும் படியுங்கள்: வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்து நீதி மன்றம் எழுப்பிய 7 கேள்வி. அசராமல் பதிலளித்து தெறிக்கவிட்ட ராமதாஸ்.

அதிமுக அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு தாயுள்ளத்தோடு அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்திருக்கிறது. அதிமுக அரசு சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் நேரில் சந்தித்தபோது, முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க கோரிக்கை வைத்தேன். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அதிமுக ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல்  இப்போதுள்ள திமுகவை போல் அதிமுக என்றுமே இலங்கை தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டது இல்லை என அவர் கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios