Asianet News TamilAsianet News Tamil

இந்த விஷயத்தில் தமிழகத்தை அடிச்சுக்க முடியுமா.? பட்டியலில் தமிழகம்தான் டாப்... எதில் தெரியுமா..?

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை ரூ.1001 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

Can Tamil Nadu be beaten in this matter? Tamil Nadu tops the list ... you know what ..?
Author
Delhi, First Published Apr 16, 2021, 10:14 PM IST

Can Tamil Nadu be beaten in this matter? Tamil Nadu tops the list ... you know what ..?

தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. மேற்குவங்கத்தில் மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாகத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் 4 கட்டத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலையொட்டி ஐந்து மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.Can Tamil Nadu be beaten in this matter? Tamil Nadu tops the list ... you know what ..?
இதன்படி, “இதுவரை 5 மாநிலங்கள் மொத்தம் ரூ.1001.4 கோடி மதிப்பிலான பணம், நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்தப் பட்டியலில் முன்னணியில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரு.446.28 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் ரூ.300.11 கோடி, அஸ்ஸாமில் ரூ.122.32 கோடி, கேரளாவில் ரு.84.91 கோடி, புதுச்சேரியில் ரூ.36.95 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.” என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios