சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று கூறியவதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த திக ஊர்வலத்தில் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்து வந்து செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். இந்த பேரணிக்கு தந்தை பெரியால் தலைமை தாங்கியதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை. பெரியால் இந்து தெய்வங்களை நிர்வாணமாக எடுத்துவரவில்லை என மறுக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பெரியாரை இழிவுபடுத்திய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் கோவையில் முதலில் புகார் அளித்ததனர். பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய ஊர்களில் இந்த புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரியார் குறித்து தவறாக பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவில்லை என்றால் 23-ம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட உள்ளதாக கு.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இதனையடுத்து, ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த்;- துக்ளக் விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி உள்ளது. நான் இல்லாத விஷயத்தை சொன்னதாக சொல்கிறார்கள். இந்து கடவுள்கள் குறித்து அப்போது சேலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளது.

இல்லாத விஷயத்தை நான் சொல்லவில்லை. நான் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானாதை பேசினேன். உண்மையை தான் பேசி உள்ளேன், ஆகையால் யாரிடமும் மன்னிப்பு, வருத்தம் கேட்க முடியாது. 1971-ல் நிகழ்ந்த விஷயம், மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்றார்.