கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வருமானம் இன்றியும் சம்பளம் குறைக்கப்பட்ட ஊழியர்களும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் நாளை வழங்க இருக்கும் தீர்ப்பை பொறுத்தே இவர்கள் சந்தோசம் உண்மையிலேயே பலனளிக்கும்.

கொரோனா பரவலை அடுத்து அனைத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டி, வட்டி மீதான வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்வது குறித்து பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. மத்திய அரசின் பதில் மனுவை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, கடன் தவணை நீட்டிப்பு காலத்தை, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்க இயலும் என அவர் கூறினார்.

மேலும், கொரோனாவால் எந்தெந்த துறைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ற வகையில் இந்த கால அவகாசத்தை வழங்குவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கடன் தவணை நீட்டிப்பு காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது பற்றி பரிசீலிக்குமாறு ஏற்கனவே ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வட்டி மீது விதிக்கப்படும் வட்டியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக நாளை தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட கடன்தவணை கால நீட்டிப்பு காலமான 6 மாதம் நேற்றுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.அந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் துஷர் மேத்தா, ‘வங்கித் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்வது தொடர்பாக வங்கிகள் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையே ஆலோசனை நடைபெற்றுவருகிறது.அதில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஜி.டி.பியின் அளவு மைனஸ் 23 சதவீதமாக குறைந்துள்ளது. வட்டிக்கு வட்டி விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் நாங்கள் ஆலோசித்துவருகிறோம். வங்கித் தவணை செலுத்தவற்கான கால அவகாசத்தை இரண்டுகள் வரை ஒத்திவைக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்..

முழு ஊரடங்கால் பலர் வேலை இழந்துள்ளனர். சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்நோக்கி உள்ளனர் .