அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் பார்க்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. முதல் நாளான அன்று 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து, இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் கூடிய சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் 2-வது நாளாக நடைபெற்று வருகிறது. 

இந்த பட்ஜெட் மீதான விவகாரத்தில் எதிர்கட்சியை சேர்ந்த திமுக கொறடா சக்கரபாணி அவர்கள் பேசினார். அப்போது, சிஏஏ விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு தொடர்பாகவும், அதற்கு அனுமதிக்கூடாது. அதற்கு எதிராக தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் அடிப்படையில் அவர் கோரிக்கை வைத்தார். 

இதையும் படிங்க;-  பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

அதற்கு பதிலளித்து குறுக்கீட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி;- சிஏஏ விவகாரத்தில் சொல்லி, சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவல்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றனர். இந்த தவறான கருத்தால் அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அதேநேரத்தில் குடியுரிமை சட்டத்தால் தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தால் பாதிப்பில்லை என மீண்டும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். 

மேலும், குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. தமிழக அரசிடம் இல்லை. மத்திய அரசுதான் முடிவெடுக்கும் சூழலில் உள்ளது. மத்திய அரசிடம் நாடாளுமன்ற திமுக உறுப்பினர்கள் வலியுறுத்துங்கள் என்றார். குடியரிமை திருத்த சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என திமுக விளக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.