Asianet News TamilAsianet News Tamil

டி.டி.வி.தினகரனால் பறிபோன அதிமுகவின் 4 சீட்... நூலிழையில் தப்பிய எடப்பாடி அரசு..!

அதிமுகவின் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை அமமுக கட்சி பறித்துள்ளது. இதனால் திமுக எளிதாக வெற்றி பெற்றுள்ளது. 

by-election... Ammk candidates votes in some constituency damaged AIADMK
Author
Tamil Nadu, First Published May 24, 2019, 4:33 PM IST

அதிமுகவின் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வெற்றியை அமமுக கட்சி பறித்துள்ளது. இதனால் திமுக எளிதாக வெற்றி பெற்றுள்ளது. 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் மற்றும் மே 19-ம் தேதிகளில் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலை காட்டிலும் இடைத்தேர்தலுக்கே திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்தன. திமுக 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நேரடியாக ஆட்சியை பிடித்துவிடும். அதிமுக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் 4 தொகுதிகளை நிச்சயம் கைப்பற்ற வேண்டும் என்ற சூழ்நிலை இருந்து வந்தது. by-election... Ammk candidates votes in some constituency damaged AIADMK

இந்நிலையில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டன. இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில், சில இடங்களில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதில், 4 தொகுதிகளில் அமமுக பெற்றுள்ள வாக்குகள் அதிமுகவின் வெற்றியை பாதித்துள்ளது. by-election... Ammk candidates votes in some constituency damaged AIADMK

4 தொகுதிகள் விவரம்;-

* திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் 85,376 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் முனியாண்டி 82,964 வாக்குகள் பெற்றுள்ளார். 2,412 வாக்குகள் தான் வித்தியாசம். அமமுக வேட்பாளர் மகேந்திரன் 31,152 வாக்குகள் பெற்றுள்ளார். 

* ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையா 73,241 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மோகன் 53,584 வாக்குகள் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம் 18,718 வாக்குகள். அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் 27,500 வாக்குகள் பெற்றுள்ளார். 

* பெரிகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் 66,986 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மயில்வேல் 51,516 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 15,470 வாக்குகள். இங்கு, அமமுக வேட்பாளர் கதிர்காமு 20,685 வாக்குகள் பெற்றுள்ளது. 

* ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் மகாராஜன் 66,310 வாக்குகளும், அதிமுகவின் வேட்பாளர் லோகிராஜன் 61,857 பெற்று 2-ம் இடம் பிடித்தார். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 4,453 வாக்குகள். இங்கு, அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் 22,661 வாக்குகள் பெற்றுள்ளார். 

* சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெறும் 456 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் அமமுக 12,511 வாக்குகள் பெற்றுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios