Asianet News TamilAsianet News Tamil

குடி வெறியர்களுக்கு குஷியான செய்தி... மதுபாட்டில்கள் வாங்க சிறப்பு ‘பாஸ்’..!

ஊரடங்கு உத்தரவால் குடியை விடமுடியாமல் வீட்டிற்குள் முடங்கி மன நோயாளிப்போல் தவித்து வருகின்றனர். அவர்களின் நிலைமை கருதி மது வெறியர்களுக்கு  மருத்துவர்களின் சிபாரிசின் பேரில், மதுபானம் வாங்க  சிறப்பு ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. 

Buy Special Pass for tasmac
Author
Kerala, First Published Apr 1, 2020, 10:53 AM IST

ஊரடங்கு உத்தரவால் குடியை விடமுடியாமல் வீட்டிற்குள் முடங்கி மன நோயாளிப்போல் தவித்து வருகின்றனர். அவர்களின் நிலைமை கருதி மது வெறியர்களுக்கு  மருத்துவர்களின் சிபாரிசின் பேரில், மதுபானம் வாங்க  சிறப்பு ‘பாஸ்’ வழங்கப்படுகிறது. 

கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் இந்தியா முழுவதும் மது தட்டுப்பாடு நிலவியது. கேரளாவில் மது அருந்த முடியாமல் 6 பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு வந்தனர்.Buy Special Pass for tasmac

இந்நிலையில் குடிப் பழக்கத்தை கைவிடமுடியாத குடிமகன்களுக்கு கேரள அரசு சிறப்பு ‘பாஸ்’கள் வழங்கி வருகிறது. அதாவது மருத்துவரின் சிபாரிசின் பேரில் இந்த பாஸ்கள் வழங்கப்படுகின்றன. 

சிறப்பு மதுபான ‘பாஸ்’ பெற விரும்பும் குடிமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற ஏதாவது ஒன்றை அணுகி “இவர் குடிப்பழக்கத்தை விட்டதால், பக்க விளைவுகளை சந்தித்து வருபவர்” என்பதற்கான மருத்துவரின் பரிந்துரை சீட்டை பெறவேண்டும்.Buy Special Pass for tasmac

அத்துடன் அரசு அளித்து இருக்கும் அடையாள அட்டையையும் சேர்த்து, வணிக வரித்துறை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறப்பு மதுபான ‘பாஸ்’களை வழங்குவார்கள். அதனை கூட்டுறவு சங்க அங்காடிகளில் காட்டி மதுபாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம். அதேவேளை கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவ அமைப்பின் பொதுச் செயலாளர் விஜயகிருஷ்ணன், “இது மருத்துவ மூடத்தனம். குடியை விடமுடியாதவர்கள் மருத்துவர்களை அணுகினால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப் போகிறார்கள். அதைவிடுத்து அவர்களுக்கு அரசே மது வழங்குவது என்பது மருத்துவர்களின் தார்மீக உரிமையை அவமதிப்பதற்கு ஒப்பானது’’ என அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios