தமிழகத்தில் 22-ம் தேதி பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 22-ம்  தேதி மக்கள் ஊரடங்கு முறையைக் கடைபிடிக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பேசியபோது வலியுறுத்தினார். இந்த ஊரடங்கு முறையை செயல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் 22 அன்று பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்

 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றைத் தடுக்க பிரதமர் கூடிறியபடி 22-ந்தேதி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரெயில்களும் ஞாயிறன்று இயங்காது.
பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.