பேருந்துகளுக்குள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதையும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதையும் உறுதி செய்த பிறகே நடத்துநார்கள் பயணச்சீட்டு வழங்குகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் நிறுத்தி பேருந்துகள், ரயில்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. சரியாக 161 நாட்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கிய பேருந்துகளால் எளிய மக்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர். பேருந்துகளுக்குள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதையும், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதையும் உறுதி செய்த பிறகே நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்குகின்றனர்.சென்னை மட்டுமன்றி அனைத்து மாவட்டங்களிலும் அரசுப்பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.