மின் கட்டணம், பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணம் உயருகிறதா? போக்குவரத்து அமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்.
தமிழக அரசுப் போக்குவரத்து கழகம், மிகப்பெரிய கடனில் இருக்கிறது. காரணம், டீசல் விலை உயர்வுதான். இந்த டீசல் விலை உயர்வை ஒரு வகையிலும் கணக்கிட முடியாமல், கட்டுக்கடங்காமல் உயர்த்தியதால்தான், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்;- தமிழக அரசுப் போக்குவரத்து கழகம், மிகப்பெரிய கடனில் இருக்கிறது. காரணம், டீசல் விலை உயர்வுதான். இந்த டீசல் விலை உயர்வை ஒரு வகையிலும் கணக்கிட முடியாமல், கட்டுக்கடங்காமல் உயர்த்தியதால்தான், மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறோம். அப்படி இருந்த போதிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் முதலமைச்சர் பேருந்து கட்டணம் உயர்வு கிடையாது என ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க;- விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என்பது உண்மையில்லை… அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!
அருகிலுள்ள மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருந்தாலும், தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக பேருந்து கட்டணம் உயர்த்தக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி 1,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பால் விலை மற்றும் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படுமோ என பொதுமக்கள் பீதியில் இருந்து வந்த நிலையில் எந்த ஒரு சூழலிலும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் சிவசங்கர் கூறி இருப்பது நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- அரசு பேருந்துகளில் கட்டண சலுகை.. வெளியான அதிரடி அறிவிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!