அரசு பேருந்துகளில் கட்டண சலுகை.. வெளியான அதிரடி அறிவிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த சட்டபேரவை கூட்டத்தொடரிலேயே மானிய கோரிக்கை விவாதத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

Fare concession on tnstc buses tn govt super announcement

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து மக்களுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்து வருகிறது திமுக. குறிப்பாக மக்களுக்கு அதிக அளவில் பயனுள்ளதாக இருக்கும் திட்டம் மகளிர் இலவச பேருந்து திட்டம். மேலும் அரசு விரைவு பேருந்திலும் புதுசு புதுசாக அம்சங்கள் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது தமிழக போக்குவரத்துத்துறை. 

Fare concession on tnstc buses tn govt super announcement

மேலும் செய்திகளுக்கு..“பிரதமர் பதவி டார்கெட்.! பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய ஸ்டாலின் - ராகுல் காந்தி” மாஸ்டர் பிளான் எடுபடுமா ?

அந்த வகையில் அரசு விரைவு பேருந்துகளில் விவசாய மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் குறைந்த விலையில் பார்சல் அனுப்பும் வசதியை கொண்டு வந்தது. தமிழகத்தில் 300 கிலோ மீட்டருக்கு அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்து கொள்ளும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன் பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திட்டமானது அமலுக்கு வர உள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Fare concession on tnstc buses tn govt super announcement

அதாவது பயணிகள் நீண்ட தூரம் பஸ்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும், தனியார் ஆம்னி பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்பவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், இணையதளம் மூலமாக இருவருக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகை விழா காலங்களில் பொருந்தாது என்றும் இதர நாட்களில் வழக்கம் போல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர்..மார்கரெட் தாட்சரின் மறுஉருவம் - யார் இந்த லிஸ் டிரஸ் ?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios