bus fare hiked normal bus increased 1050

இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாகினர். இந்த நிலையில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால் கட்டண உயர்வு திரும்ப பெறப்படாது என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் தமிழக அரசுக்குப் பெரும் தலைவலியாகி விட்டது. திரும்பிய பக்கமெல்லாம் போராட்டங்கள் நடக்கிறது. எடப்பாடி வீட்டை முற்றுகையிடுகிறார்கள். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், எதிர்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பஸ் கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வகையில் மாநகர பஸ்களில் கட்டண மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்டணத்தை குறைக்காமல் குறைந்த கட்டணம் உள்ள சாதாரண பஸ்கள் அதிகளவு இயக்கப்படுகிறது. மொத்தமுள்ள 3200 பஸ்களில் முதலில் 500-க்கும் குறைவான அளவிலேயே சாதாரண பஸ்கள் அதாவது ஒயிட் போர்டு இயக்கப்பட்டன.

ஆனால் பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு அதிகம் வந்ததால் தற்போது சாதாரண பஸ்களின் எண்ணிக்கை 1050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் சாதாரண கட்டண பஸ்கள் இப்போது அதிகளவு இயக்கப்படுவதால் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது;

பொதுமக்கள் நலன் கருதி சென்னையில் இயக்கப்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகர பஸ்களில் 1050 பஸ்கள் சாதாரண கட்டண பேருந்தாக இயக்கப்படுகிறது. வெளியில் பார்ப்பதற்கு டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் பஸ்சாக இருந்தாலும் அதில் “ஒயிட்போர்டு” வைத்து சாதாரணக் கட்டண பஸ்சாக இயக்குகிறோம்.

மேலும் ஒயிட்போர்டு இல்லாமல் இருந்தால் அதில் வெள்ளை நிறத்தில் எழுதி ஒட்டி பயணிகளுக்கு தெரியும்படி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட் டுள்ள கட்டண விவரம் குறித்தும் அனைத்து மாநகர பஸ்களிலும் பயணிகளுக்கு தெரியும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த பஸ்களின் எண்ணிக்கை அதிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.