Asianet News TamilAsianet News Tamil

தமிழக பட்ஜெட் 2018 -2019... பட்ஜெட்டில் முக்கிய சிறப்பம்சங்கள்...

Budget 2018 2019 Key Features of the Budget
Budget 2018 2019  Key Features of the Budget
Author
First Published Mar 15, 2018, 11:45 AM IST


இன்று தமிழக சட்ட சபையில் 2018 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட் 2018 -2019 சிறப்பம்சங்கள்:

3 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ217 கோடியில் காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்டப்பட இருக்கிறது.

பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ786 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்புக்கு ரூ519 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

அதில் இந்த ஆண்டுக்கான கடனாக ரூ.3,55, 845 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் ரூ.3,14,366 கோடியாக இருந்தது.

ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.

2018-19ல் அரசின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடியாக இருக்கும்.

அரசு ஊழியர் ஊதிய உயர்வால் ரூ14,719 கோடி செலவு ஏற்பட்டுள்ளது.

வேலையில்லா இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும்.

177 மீனவர்களுக்கு தலா ரூ20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது

•    200 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்    
•    
•    நெடுஞ்சாலை துறைக்கு ரூ11,073 கோடி ஒதுக்கீடு    

மீன்வளத்துறைக்கு ரூ1016.53 கோடி ஒதுக்கீடு    

மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பு நிதி ரூ25,000 ஆக உயர்வு    

சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு    

சுகாதாரத்துறைக்கு ரூ11,000 கோடி ஒதுக்கீடு    

ரூ8,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்    

கடலூர் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம்    

ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்    

உணவு மானியத்துக்கு ரூ6,000 கோடி ஒதுக்கீடு    

அத்திக்கடவு திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது    

தாமிரபரணி- நம்பியாறு இணைப்புக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு    

மானிய ஸ்கூட்டர் திட்டத்துக்கு ரூ250 கோடி ஒதுக்கீடு    

புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க புதிய திட்டம்    

அத்திக்கடவு திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது    

தாமிரபரணி- நம்பியாறு இணைப்புக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம்    
புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

கிண்டியில் ரூ.20 கோடியில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு விலையில்லா, லேப்டாப் வழங்க ரூ.758 கோடி,

கட்டாய கல்வியை செயல்படுத்த ரூ.200.70 கோடி ஒதுக்கப்படும்.

100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.  

மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு ரூ.347 கோடி

நீதி நிர்வாகத்துறைக்கு ரூ.1197 கோடி ஒதுக்கீடு

மணலியில் ரூ.18.51 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு படை குடியிருப்புகள் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ. 10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும்.

2018-19ம் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் தமிழ் வளர்ச்சி துறைக்காக ரூ. 52.56 கோடி நிதி ஒதுக்கீடு

நலிந்த கலைஞர்களுக்கான நிதி உதவி ரூ. 1,500ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
இதற்கென ஆண்டு மானியமாக ரூ. 2 கோடி

ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவிட ரூ. 10 கோடி

ரூ1,43,962 கோடி கடன் பெற தமிழக அரசுதிட்டம்

மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி

தமிழக அரசின் செலவு ரூ2.04 லட்சம் கோடி

தமிழகத்தின் வருவாய் ரூ1.76 லட்சம் கோடி

திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு

2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

ரூ38 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பிரிவுகள்
புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ1,087 கோடி

ரூ3,298 கோடியில் வெள்ள தடுப்புத் திட்டம்

1,000 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்    

சாலை பராமரிப்புக்கு ரூ3,800 கோடி ஒதுக்கீடு    

பள்ளி கல்வி துறைக்கு ரூ27,000 கோடி ஒதுக்கீடு    

உள்ளாட்சித் தேர்தல் நடத்த ரூ172 கோடி நிதி ஒதுக்கீடு.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios