கடந்த ஜூன் மாத இறுதியில் தேசத்திற்கு எதிராகப் பேசிய விவகாரத்தில் திருமுருகன் காந்தி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதால், அவர் எவ்வழியாக இந்தியா திரும்பினாலும் கைது செய்ய எல்லா விமான நிலையங்களுக்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெனீவாவுக்குச் சென்றிருந்த திருமுருகன் காந்தி, துபாய் வழியாக நேற்று முன்தினம்  பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, அவரை விமான நிலைய காவலர்கள் கைது செய்தனர்.

அதற்குப் பிறகு அவர் சென்னையிலிருந்து சென்ற தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற நீதிபதி  பிரகாஷ் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். 

ஆனால் திருமுருகன் காந்தியை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என கூறி அவரை கைது செய்ய உத்தரவிட மறுத்து விட்டார். இதையடுத்த அவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளரும், சமூக சேவகருமான கிஷோர் கே சாமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருமுருகன் காந்தி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது கருத்தை கூறி ஜனநாயக அடிப்படையில் உரிமை உள்ளது. 

ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு. பேச்சு சுதந்திரம் என்பது மற்றவர்களின் மதம், கலாச்சாரம் போன்றவற்றை எந்த விதத்திலும்  பாதிக்காமல் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு முரகன் காந்தி பொது மேடைகளிலும், வாட்ஸ்அப் போன்ற சமுக வலை தளங்களிலும் குறிப்பிட்ட ஒரு ஜாதி குறித்து தொடர்ந்து அவதுறாக பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது இந்த பேச்சு சமூக , ஜாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் உள்ளது என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பார்ப்பனர்கள் குறித்து அவர் பேசும் பேச்சு அவர்களது மனதை புண்படுத்துவதாக அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதுவும் பார்ப்பன நீதிபதிகள் பணம் வாங்குவதாக எந்திவித முகாந்திரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை குறிவருவதாக தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிஷோர் கே சாமி தனது புகாரில் தெரிவித்துளளார்.