காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, இன்று கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று மோடியின் வருகையைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று எதிர்கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, ஸ்டாலின் வீடு மற்றும்  தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் இன்று காலை 6 மணிக்கு கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் வீடுகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதே போன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சை,திருவாரூர், நாகை,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பொது மக்களும், விவசாயிகளும் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.