இதற்கிடையில் மயிலாடுதுறை செல்லும் வழியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் ஆளுநரின் வாகனம் மீது கல்லெறிந்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆளுநர் ஆர்.என் ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்போது ஆளுநரின் வாகனம் மீது கொடி கம்புகள் வீடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுநருக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 150க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக அதை கடுமையாக விமர்சித்து வருகிறது. அதே நேரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மாற்றிவிட்டு உளவுத்துறையை பின்னணியாகக் கொண்ட காவல்துறை அதிகாரி ஆர்.என் ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்நிலையில் ஆளுநருக்கும் முதல்வருக்குமான மோதல் தொடங்கியுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அறிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் முதல் முறை திருப்பி அனுப்பியதுடன் அது இரண்டாவது முறையும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆளுநர் அதை குடியரசுக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால் ஆளுநருக்கு மாநில அரசுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது . இதேபோல் மாநில அரசின் 9 மசோதாக்களுக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை, இதனால் ஆளுநருக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.
அதோடு ஆளுநர் ஆர்.என் ரவி கொடுத்த தேனீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்தது. கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் அதை புறக்கணித்தன. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் உதாசீனப்படுத்துவது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் அதனால் அவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க முடியாது என அக்கட்சிகள் கூறின. அதேபோல் ஆளுநர் செல்லுமிடமெல்லாம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதே போன்ற போராட்டத்தை பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக திமுக கூட்டசி கட்சிகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் ரவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறையில் மாவட்டத்திலிருந்து விழா எடுக்கப்படவுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து ஞானரதம் இன்று தெலுங்கா நகருக்கு செல்ல உள்ளது. அதை ஆளுநர் ஆர். ரவி இன்று துவக்கி வைக்கிறார். முன்னதாக விழாவில் கலந்துகொள்ள ஆர். என் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆர்.என் ரவியை தர்மபுர ஆதீனம் அழைக்கக்கூடாது என்றும், அவர் தமிழக மக்களையும், சட்டமன்ற தீர்மானத்தையும் அவமதிப்பவர் என்றும் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. மேலும் நேரடியாக மடத்திற்கே சென்று ஆளுநரை அழைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.
அதை மீறி அழைத்தால் தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்றும் எச்சரித்து வந்தனர். இந்நிலையில் திட்டமிட்டபடி ஆளுநர் மயிலாடுதுறைக்கு வருகை தந்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி இன்று காலையே திரண்டனர். அதே நேரத்தில் பாஜகவினர் ஆளுநரை வரவேற்க திரண்டனர். இதனால் அந்த அங்கு பதட்டம் அதிகரித்தது. எனவே ஆளுநரின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆளுநர் வருகை தந்த போது அங்கு குவிந்திருந்த எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர்.

இதற்கிடையில் மயிலாடுதுறை செல்லும் வழியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் ஆளுநரின் வாகனம் மீது கல்லெறிந்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் இல்லையென்றால் இன்று மாலைக்குள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஆளுநரின் பாதுகாப்பிற்கு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம் தெரிவித்துள்ளார்.
