bjp wins in uttar pradesh

உத்தரபிதேசத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றது. சமாஜ்வாதி கட்சி அங்கு ஆட்சியில் இருந்தது. கடைசி நேரத்தில் அகிலேசுக்கும் முலாயம் சிங் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிளவு பட்டது. ஆனாலும் அகிலேஷ் கை ஓங்கியதால் முலாயம் ஒதுங்கிக் கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனையடுத்து அகிலேஷ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ராகுல் காந்தியும் அகிலேசும் இணைந்து தேர்தல் களத்தில் கலக்கி வந்தனர்,

பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 403 தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. தற்போது 275 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி 78 ,இடங்களிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 29 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால் அக்கட்சி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பாஜக தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியிலும் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உத்தர பிரதேச வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.