தற்போது 106 எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆட்சி நடத்திவருகிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகு பாஜக 6 தொகுதிகளில் வென்றால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தியை கருத்துக்கணிப்பில் 6 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிக வென்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்த பிறகு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. 2 தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், எஞ்சிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று கர்நாடாகவில் தேர்தல் நடைபெற்றது.

15 தொகுதிகளில் சுமார் 64 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 9ம் தேதி அன்று எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ளன. பவர் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 8-12 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் 3-6 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் 0-2 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
