ஏஸியாநெட் தமிழ் இணையதளம் சில நாட்களுக்கு முன்பே அந்த விஷயத்தை ஸ்மெல் செய்து சொல்லியிருந்தது. அது ‘டி.டி.வி. தினகரனை அரசியல் ரீதியில் ஒடுக்கி வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், அவசியப்பட்டால் அவரோடு கூட்டணி வைக்கவும் அது தயங்காது!’ என்று. இப்போது அது உறுதியாகிவிட்டது. அவசியம் ஏற்பட்டால் தினகரனுடன் தேர்தல் கூட்டணி வைக்க பா.ஜ.க. தயங்காது என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் பா.ஜ.க.வின் மாஜி மத்தியமைச்சரும், தற்போதைய மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன்.  பிரபல அரசியல் வாரம் இருமுறை இதழுக்கு வழங்கியிருக்கும் பேட்டியில், பொன்னார் கூறியிருக்கும் ஒப்புதல் தகவல்கள் அ.தி.மு.க.வை அலறவிட்டிருக்கிறன, அதேவேளையில் தினகரனுக்கு புது தெம்பினையும் ஊட்டியுள்ளனர். 
அப்படி என்ன கூறியிருக்கிறார் பொன்னார்?........


*    மேயர் பதவிக்கு எதற்காக மறைமுக தேர்தலை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது! என தெரியாது. ஆனால் ஒன்று, உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் மறைமுகத் தேர்தல் நல்லதே இல்லை. 
*    உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளும் தனித்து இறங்க வேண்டும். ஒரு தேர்தலிலாவது ஒவ்வொரு  கட்சி மீதும் மக்கள் என்ன மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறியும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக கூட்டணி கூடாது! எனும் முடிவை எல்லா கட்சிகளும் எடுக்க வேண்டும். 

*    ரஜினி கட்சி துவங்கி, பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சம்மதித்தால், அ.தி.மு.க. உடனான கூட்டணியை  கைகழுவி விடுவீர்களா? என்று கேட்கப்படுகிறது. இதற்கு என் பதில்...அன்றைய சுழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும். (இது ‘ஆமா, அ.தி.மு.க.வை கை கழுவிடுவோம்! அப்படின்னு நேரடியாவே பதில் சொல்லிட்ட மாதிரிதான்.)

*    அமித்ஷாவுக்கு, ‘போலி என்கவுண்டர்’ வழக்கு மூலம் உத்தவ்தாக்கரே செக் வைக்கிறார்! என்று பேசப்படுகிறது. எத்தனை செக் வைத்தாலும், அதிலிருந்து மீண்டு வர வழிகள் தெரியும். விசாரணை வைக்கட்டும், எதையும் எதிர்கொள்ள தயார்.  ஏன்னா அமித்ஷாஜி எந்த தவறையும் செய்யவில்லை. போலி என்கவுண்டர் வழக்கு! என்பதே போலியான ஒரு குற்றசாட்டுதான். 

*    2021 தேர்தலின் முலம் தமிழக முதல்வ்ராகிவிட ஸ்டாலின் ஆசைப்படுவதென்படு, ஓட்டைக் கப்பலில் உலகை சுற்றிவர ஆசைப்படுவதற்கு சமம்! அவ்வளவுதான். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் கூட தி.மு.க. ஆட்சிக்கு வராது, வராது, வரவே வராது. 

*    ரஜினி, டி.டி.வி. தினகரனுடன் பா.ஜ.க. இணைந்து மூன்றாவது அணியை தமிழகத்தில் அமைக்கும்!என்று சொல்லப்படுவது பற்றி கேட்பீர்களேயானால்....அதனை இப்போதே கணிக்க முடியாது, தேர்தல் நெருங்கி வரும்போதுதான் சொல்ல முடியும்.

இதுதான் பொன்னார் பேட்டியின் முக்கிய விஷயங்கள்.  ஆக, தினகரனோடு கை குலுக்க ரெடி!ன்னு சொல்லிட்டீங்க இல்லையா    ! அப்படின்னா அவர் மேலே தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்!ன்னு உங்க கட்சியும், ஆட்சியும் போட்ட வழக்கெல்லாம் லூலூலூலாயிக்குதானா!?.......என்று நறுக்குன்னு கேட்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பதில் சொல்லுங்க பொன்னார் சார்!