இந்து மதத்தை பாதுகாக்குறவங்களே நாங்கள் தான்! இந்துக்களை அரசியல் கேடயமாக பயன்படுத்தும் பாஜக! கனிமொழி விளாசல்!
பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜ்ஜியம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு ராம ராஜ்ஜியம், அது மோடி ராஜ்ஜியம், ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நமது கனவு ராமசாமி ராஜ்ஜியம், ஈவெ ராமசாமி ராஜ்ஜியம். அந்த ராஜ்யத்தை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம்.
பெருபான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு பாஜக ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் உடன்குடி பஜாரில் நேற்று இரவு நடந்தது. இதில், திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்று பேசுகையில்: பாஜக தொடர்ந்து மக்களை பிரித்தாளுகிறது. இந்துக்களை இந்து மதத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள் தான் என்று கூறுகின்றனர். ஆனால் அவர்களை அரசியல் கேடயமாகவும், அரசியலுக்கான ஆயுதமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெருபான்மையாக இருக்கக்கூடிய இந்து மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கை 2024.. தூத்துக்குடி மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் - வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஒரு பார்வை!
விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அரசு நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். மாநில உரிமைகளை கொஞ்சம், கொஞ்சமாக பறிப்பதாக குற்றம்சாட்டினார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் காணாமல் போய்விடும்.
பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜ்ஜியம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு ராம ராஜ்ஜியம், அது மோடி ராஜ்ஜியம், ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியம். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நமது கனவு ராமசாமி ராஜ்ஜியம், ஈவெ ராமசாமி ராஜ்ஜியம். அந்த ராஜ்யத்தை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம். அதுவே இந்தியா கூட்டணியின் வெற்றியாக இருக்கும்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆரம்பித்து ஒவ்வொரு மாநிலமாக சென்று டீ, டிபன் மட்டுமே சாப்பிட்டார்கள்.! வானதி சீனிவாசன் கிண்டல்
மதத்தை வைத்து அனைவரையும் பிரித்து விடுவார்கள். தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று ஆணையிட்டு அதை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என கனிமொழி பேசியுள்ளார்.