நாங்குநேரி தொகுதி இப்போது இடைத்தேர்தலால் சூடாகி வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி நின்று வெற்றி பெற்றது. ஆகையால் இந்த தொகுதியை விட்டு விடக்கூடாது காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால், திமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அங்கு காங்கிரஸ் போட்டியிட்டு வென்று விட்டால் இன்னும் பாதாளத்துக்கு போய் விடுவோம் என கலக்கத்தில் உள்ள பாஜக, எம்பி தேர்தலில் கோட்டை விட்டதை போல விட்டுவிடக்கூடாது. பாஜக சார்பில் ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்துக்குள் நுழையலாம். ஆகையால் அந்தத் தொகுதியை ஒதுக்கும்படி பாஜக, அதிமுகவை நெருக்குவதாகக் கூறுகிறார்கள். ஆனால், அதிமுகவோ இன்னும் எம்.எல்.ஏக்களின் பலத்தை அதிகரிக்க நினைப்பதால் பாஜகவின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்கிறது. 

நாங்குநேரியில் அதிமுக சார்பாக போட்டியிட வேட்பாளரையும் முடிவு செய்து விட்டதாகத் தகவல். அதிமுக பிரச்சார பேச்சாளரும், திரைப்பட இயக்குனருமான நாஞ்சில் அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுகவில் எப்படி வாகை சந்திரசேகர், நட்சத்திர பேச்சாளராகவும், வேளச்சேரி எம்எல்ஏவாகவும் இருக்கிறாரோ, அதேபோல அதிமுகவில் நாஞ்சில் அன்பழகனை கொண்டு வர அதிமுக முயல்வதாகவும் சொல்லப்படுகிறது.