நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையை குறி வைக்கும் பாஜக..! தன் மகனுக்காக அலறும் ஜெயக்குமார்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளை குறிவைத்து பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்தநிலையில் தென் சென்னை தொகுதியை பாஜக குறிவைத்திருப்பது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
9 தொகுதிகளை குறி வைக்கும் பாஜக
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. இந்தநிலையில 3 வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 150 தொகுதிகளை இலக்காக நிர்ணயித்து பாஜக களம் இறங்கவுள்ளது. அதில் தமிழகத்தை பொறுத்தவரை தென்சென்னை, கோவை, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளை குறிவைத்துள்ளது.
இந்த 9 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த தொகுதிகளில் வாக்கு சாவடி முகவர்களை தயார் படுத்தி வருகிறது. இந்தநிலையில் சென்னையில் நேற்று தென் சென்னை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கத்தில் பாஜக சார்பாக பூத் ஏஜெண்ட் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாக்கு சாவடி முகவர்கள் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல... செல்லூர் ராஜூ பரபரப்பு கருத்து!!
அதிர்ச்சியில் ஜெயக்குமார்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தென் சென்னை பாராளுமன்ற தொகுதி என்பது மிக முக்கியமான தொகுதி என்பதால் பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் ஆலோசனை மேற்கொண்டோம். தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பான திட்டங்களை பிரதமர் வழங்கியுள்ளார். அதிமுகவுடன் எங்களது கூட்டணி மிகவும் வலிமையாக தான் இருக்கிறது என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தென் சென்னை தொகுதி என்பது அதிமுகவின் மூத்த அமைச்சராகவும் மூத்த தலைவராக இருக்கும் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் ஏற்கனவே எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியாகும். எனவே இந்த தொகுதியை பாஜக குறிவைத்துள்ளது என்ற தகவல் ஜெயக்குமாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனது மகனுக்கு இந்த முறை மீண்டும் தென் சென்னை தொகுதியை பெற்றிட வேண்டும் என்பதில் ஜெயக்குமார் தீவிரமாக உள்ளார்.
அதிமுக தான் முடிவு செய்யும்
இந்தநிலையில் தென் சென்னை தொகுதியை பாஐக குறிவைத்துள்ளது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளது. எனவே இப்போதே இந்த தொகுதி இந்த கட்சிக்கு என்று முடிவு செய்ய முடியாது. தொகுதி பங்கீட்டு குழு தான் முடிவு செய்யும். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு விருப்பமான தொகுதியை கொடுப்பார்கள். அந்த தொகுதியில் இருந்து கூட்டணி கட்சிக்கு தொகுதிகள் பிரித்து வழங்கப்படும். அதே நேரத்தில் பாஜக எந்த தொகுதியை வேண்டும் என்று கேட்கலாம். ஆனால் அதை கொடுப்பதா இல்லையா என்பது அதிமுக தலைமைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்